நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரா நீங்க

Loading...

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரா நீங்கவளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்றாகும், நம் ரத்தத்தில் சுரக்கும் இன்சுலீன் அளவு சமச்சீர் நிலைமையை இழப்பதால் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய்கள் நம் உடலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்காமல், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குகிறது.
மேலும் நீரிழிவு நோய் அதிகமாகி ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை கலக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றை பெருமளவில் பாதிக்கிறது.
எனவே நீரிழிவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அசாதரணமாக இருந்து விடாமல் உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும்.

உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சிலபேர் இனிப்பான உணவுகளை சாப்பிடுவதில்லை.
ஆனால் அந்த இனிப்பான சில உணவுகளில் குறைவான சர்க்கரைகள் இருப்பதால், அவைகளில் ஒரு சில உணவுகளை மட்டும் நீங்கள் சாப்பிடலாம்.

நட்ஸ்

நட்ஸ் உணவில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட், விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவைகள் இருப்பதால், இதில் உள்ள சில கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக இன்சுலீன் சுரப்பதை கட்டுப்படுத்துகின்றது.


ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த எண்ணெயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து கொண்டால், உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம்.

பீன்ஸ்

பீன்ஸில் புரோட்டீன், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவு நிறைந்துள்ளது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.

தயிர்

பாலுக்கு அடுத்தப்படியாக கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள் தயிர் தான். எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரந்து நீரிழிவு நோய் குறையும்.

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடுகள் இருக்கும்.
எனவே கண் பார்வை குறைபாட்டை சரிசெய்ய மீன் சாப்பிட வேண்டும், இதனால் பார்வை பாதுகாக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் தடுக்கப்படும்.


சிட்ரஸ் பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிட்ரஸ் வகை பழங்களான ஆரஞ்சு, பூசணி வகைகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். நீரிழிவு நோய் வந்தால், உடலில் அசதி உண்டாகும்.
இதனால் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள விட்டமின் C உடலில் உள்ள எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகளில் விட்டமின் C, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும்.
இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்கள் என்பதால் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தக்காளி

தக்காளியில் விட்டமின் C, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது.எனவே தக்காளியை ஜீஸ் செய்து சாப்பிடலாம்.


மஞ்சள் பூசணிக்காய்

மஞ்சள் பூசணி இனிப்பாக இருப்பதால், இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல.
உண்மையில் அந்த பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே இதனை அவ்வப்போது சிறிது சாப்பிட வேண்டும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரிப் பழங்களில் குறைந்த அளவு இனிப்பு இருப்பதால், இவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

நவதானியங்கள்

நவ தானியங்களில் காம்ப்ளக்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சுத்திகரிக்கப்பட்ட மாவிற்கு பதிலாக முழு கோதுமை மாவையும் பயன்படுத்துவது நல்லது.

பாகற்காய்

பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கால்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டீன்கள் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply