நீங்கள் எப்போதும் இளமையாக இருக்கனுமா இந்த ஒரு வழியை ட்ரை பண்ணுங்க

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%beவயது ஆக ஆக சுருக்கங்கள், சரும பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால் அவரவர் பராபரிப்பில் உள்ளது அழகின் ரகசியம். சிலர் வயதானாலும் அழகாய் இளமையாய் இருப்பதற்கு மூன்று காரணங்களை சொல்லலாம். ஒன்று மரபு சார்ந்து. இது இயற்கை அளித்த வரம். இரண்டு, அவர்களின் பராமரிப்பு. மூன்றாவது கெமிக்கல் கலந்த க்ரீம், மேக்கப் ஆகியவற்றை உபயோகிக்காமல் இருப்பது.

முதல் ஒன்றை தவிர்த்து, மீதி இரண்டும் நம் கையில்தான் இருக்கிறது. இவை இரண்டும் பின்பற்றினால் நிச்சயம் சரும இளமையாக காத்திடலாம். இன்றைய காலங்களில் முகத்தில் தொங்கும் சதையை இறுக்கவும், பொடாக்ஸ் ஊசியும் இருக்கிறது. ஆனால் அவை விலை அதிகம். அதோடு நிரந்தரமல்ல. முக்கியமாய் நிச்சயம் பக்க விளைவுகளைத் தரும். எத்தனை காலம்தான் அதை செய்வது. வேண்டாம். இயற்கையோடு இயற்கையாய் உங்கள் சருமத்திற்கு அழகு செய்திடலாம். எப்படி என பார்க்கலாமா?


தேவையானவை :

வெந்த சாதம் – கால் கப் தேன் – 2 ஸ்பூன் பால் – கால் கப்.
நம் சருமம் வயதானது போல் தோற்றம் தருவதற்கு முக்கிய காரணம் சரும தொய்வுதான். முகம் தொங்கிப் போய் , நம் வயதை காட்டிக் கொடுத்துவிடும். அதற்கு இந்த குறிப்பு மிக உபயோகமாக இருக்கும். வேக வைத்த சாதம் சருமத்தை இறுகச் செய்யும் ஆற்றல் கொண்டது. இவை சருமத் துவாரங்களையும் சுருங்க வைக்கும். தேன் சுருக்கங்களை குறைக்கும். பொலிவாக காண்பிக்கும். பால் அழுக்குகளையும், இறந்த செல்களையும் நீக்கி, சுத்தப்படுத்திவிடும்.


செய்முறை :

சாதத்தில், தேன் பால் கலந்து மிக்ஸியில் நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். பிரகு இதனை முகத்தில் மாஸ்க் போலத் தடவி, காய விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
முகத்தில் அப்போதே மாற்றங்கள் தெரியும். வாரம் மூன்று முறை செய்தால், சருமம் இறுகி, சுருக்கங்கள் மரைந்து, இளமையோடு காட்சியளிப்பீர்கள். வீட்டில் நீங்களும் செய்து பாருங்கள்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply