நம்மை அதிர வைக்கும் கூகுள் மேப்ஸ் தந்திரங்கள்

Loading...

%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%af%81கூகுள் நிறுவனத்தின் வரைபட சேவையான கூகுள் மேப்ஸ் பிப்ரவரி 8, 2005 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. அன்று துவங்கி இன்று வரை வரைபட சேவையை சிறப்பாக வழங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
கூகுள் மேப் உங்களுக்கு திசையை மட்டுமே காட்டுகின்றது என்று நினைக்கின்றீர்களா?உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் கூகுள் மேப் பற்றிய பல விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

காலத்தின் பயணம்

நீங்கள் வசிக்கும் இடம் முன்பு இருந்ததில் இருந்து மாற்றம் அடைந்திருக்கும். அவை முன்பு இருந்த நிலையை காண ஆசையாக இருந்தால். முதலில் மேலே இடது ஓரத்தில் இருக்கும் சிறிய கிளாக் ஐகானை கிலிக் செய்யவும். உங்கள் தெருவின் முன்பு இருந்த தோற்றத்தை கண்டு மகிழ முடியும்.

சூப்பர்மேனை போல் பறக்க

நீங்கள் சூப்பர்மேன் பார்ப்பது போன்று உலகத்தை மேல் இருந்து பார்க்க ஆசையா. அப்படி என்றால் கூகுள் earth மூலம் தொப்பி அணியாமல் உங்கள் வீட்டில் இருந்தபடியே உலகத்தை 3டி flyby பார்வையில் பார்க்க முடியும். அதற்கு கீழே கூகுள் earth இன் ஓரத்தில் வலது பக்கம் பார்க்கவும். ஆனால் இது டெஸ்க்டாப்பில் மட்டுமே கிடைக்கும்.

விமானம் புக் செய்ய

நீங்கள் விமானத்தில் செல்லும் போது கூகுள் மேப்பில் உள்ள ஏர்பிளேன் ஐகான் வழங்கும் லிங்கில் தற்பொழுது இயங்கும் விமானங்களை பற்றி அறிந்து கொள்ள முடியும். இதில் விமான கட்டணம் மற்றும் நேரம் என அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

பல இடங்களுக்கு சுற்றுலா

நீங்கள் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டுமா.? நீங்கள் அடிக்கடி செல்ல வேண்டிய இடத்தை சேர்க்க தேவையில்லை. அதற்கு பதில் அட்ரெஸ் பாரின் கீழ் உள்ள ‘+’ மீது கிலிக் செய்து உங்கள் பயணத்தை நீட்டித்து கொண்டே செல்ல முடியும்.

வர இருக்கும் நிகழ்வுகளை கண்காணிக்க

திரைப்படம், கண்காட்சியகம் போன்றவற்றின் ஐகானை கிலிக் செய்தால் போதும். அவற்றில் வர இருக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

விலாசத்தையும் மேப்பையும் சேமிக்க

நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களின் விலாசத்தை சேமிக்க முடியும். எடுத்துக்காட்டாக அலுவலகம் மற்றும் வீட்டின் முகவரியை சேமித்து கொள்ள முடியும். சிக்னல் கிடைக்காத இடங்களின் மேப்பையும் சேமித்து கொள்ளலாம்.

மேப் பரிந்துரை

சில இடங்களுக்கு மேப் இல்லாமல் நீங்கள் அவதி பட நேரிடலாம். அதற்கு மேப் மேக்கரின் உதவியோடு நீங்களே அந்த இடத்தை பற்றிய மேப்பை வரைந்து வைத்து கொண்டால் இன்னும் ஈஸிதானே.

லைட் மோட்

உங்களுக்கு நெட் தொடர்பு சரியாக இல்லையென்றால் நீங்கள் லைட் மோட் பயன்படுத்த முடியும். இதில் கூகுள் earth பயன்படுத்த முடியாது என்றாலும் நகரத்தின் மேலோட்ட காட்சியை பார்க்க முடியும். கீழே வலது ஓரத்தில் லைட்னிங் போல்ட் ஐகான் இருக்கும். அதுவே லைட் மோடுக்கான வழி.

தூரத்தை அளவிட

நீங்கள் எந்த தூரத்தையும் எங்கிருந்தும் அளவிட முடியும். அதற்கு கூகுள் மேப்பில் ரைட் கிலிக் செய்து starting location என்பதை தேர்வு செய்யவும். இப்பொழுது நீங்கள் அளவிட வேண்டிய இடத்தை தேர்வு செய்தால் போதும் அது தானியங்கியாக உங்களுக்கு தகவலை வழங்கி விடும்.

இலவசமாக பயணிக்க

Google’s Street View உதவியுடன் நீங்கள் செல்ல வேண்டிய இடங்களை பற்றிய பார்வையை பெற முடியும். அதிலும் அந்த இடங்களுக்கு நீங்கள் நேரடியாக சென்றால் அனுபவிக்கும் அனுபவத்தை கூகுள் உங்களுக்கு வழங்கும்.

இண்டோர் வழிசெலுத்தல்

குறிப்பிட்ட ஸ்டோர் பற்றி அலைந்து திரிந்து தெரிந்து கொள்வது என்பது அவ்வளவு ஈஸியான செயல் இல்லை. அதுவும் சில இடங்களில் எலிவேட்டர் இருப்பதில்லை. இதற்கு கூகுள் மேப் இண்டோர் வழிசெலுத்தல் உதவி செய்கின்றது. ஆனால் இதற்கு குறைவான ஆப்ஷன்களே உள்ளன.

போக்குவரத்து

இதன் மூலம் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தின் போக்குவரத்து குறிப்புகளை பெற முடியும். இதன் மூலம் உங்கள் பயணமும் நேரமும் சேமிக்கப்படும்.

விரைவான வழிசெலுத்தல்

உங்களுக்கு விரைவான வழிசெலுத்தல் உடனடியாக தேவைப்பட்டால் ப்ளூ ஐகானை தொட்டு பிடிக்கவும். ரயில், கார் என நீங்கள் பயணிக்க வேண்டிய அனைத்தும் ஈஸிதான்.

லோக்கல் கைடாக இருங்கள்

உங்கள் அருகில் உள்ள இடங்களை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்தால் போதும் நீங்கள் லோக்கல் கைடாகலாம். கூகுள் மேப்பில் அந்த இடங்களை பற்றிய குறிப்புகளை நீங்கள் வழங்க முடியும். அதன் மூலம் பல பாயிண்ட்ஸ் சம்பாதிக்க முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply