நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம்

Loading...

%e0%ae%a8%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏதாவது டென்சனோ, யோசனையோ இருந்தால் நகம் கடிப்பது வழக்கம்.
நம் ஊரில் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நகம் கடிப்பவர்களுக்கு மனநல பாதிப்பு இருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வின் முடிவில்மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பதால் கைகளில் உள்ள அழுக்குகளின் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், போன்ற பாதிப்பு ஏற்படுகிறது
. சாதாரணமாகவோ, எப்போதாவதாவதோ நகம் கடிப்பவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது.
ஆனால் வலி ஏற்படும் அளவுக்கோ, விரல்களில் ரத்தம் வரும் அளவுக்கோ நகம் கடித்தால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் கூறியுள்ளார்.
நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர்.
இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply