நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள் அப்போ ஆபத்து உங்களுக்கு தான்

Loading...

%e0%ae%a8%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு, ஆனால் இது மிகவும் மோசமான ஒன்றாகும்.
நகம் கடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும், இதனை ஆரம்பத்திலேயே நிறுத்தி விடுவது நல்லது.

* நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
* சில சமயங்களில் நகங்களை கடிப்பவர்கள் அதை விழுங்கவும் வாய்ப்புகள் உண்டு, இப்படி விழுங்குவதால் வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.
* சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில், செரிமானம் ஆகாத உணவுத் துகள்கள் குடல் வால் பகுதியில் சேகரமாகும். இதனால் அப்பன்டிசைடிஸ் எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
* எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.
* தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது அது பற்களின் எனாமலை பாதித்துவிடும், பற்களில் பக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
* நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா(Salmonella), இ.கோலி(E.Coli) பக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.
* நகம் கடிக்கும் பழக்கம் அடிக்கடி இருந்தால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply