தேங்காய் கொத்தமல்லி சட்னி

Loading...

%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d
தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – கால் கப்
கொத்தமல்லி தழை – 1/2 கப்
புளி – சிறிது
இஞ்சி – 1 சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

தேங்காய் எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து


செய்முறை :

* கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி, புளி, இஞ்சி, ப.மிளகாய் போட்டு தனித்தனியாக வறுத்து ஆற வைக்கவும்.
* நன்றாக ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
* சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெ.
* இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply