தேங்காய் இறால் குழம்பு

Loading...

%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

என்னென்ன தேவை?

இறால் – 500 கிராம்
உப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கத்தரிக்காய் – 1
தக்காளி – 1
புளி சாறு – 2 – 3 தேக்கரண்டி
உப்பு – சிறிது


அரைக்க:

துருவிய தேங்காய் – 1 கப்
மல்லி – 3 தேக்கரண்டி
உலர் மிளகாய் – 5 முதல் 6
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி

ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த இறால்களை எடுத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து சிறிது நிமிடங்கள் வறுக்கவும். பின் தேங்காய் சேர்த்து கலந்து, மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். ஜாரில் அவற்றை எடுத்து நன்றாக மசிக்கவும். கத்தரிக்காய் மற்றும் தக்காளி எடுத்து வெட்டி வைக்கவும். ஒரு பானையை எடுத்து வெட்டி வைத்ததை சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு போட்டு கொதிக்க விடவும். தேங்காய் மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து புளி சாறு, உப்பு சேர்க்கவும். இறால்களை சேர்த்து சில நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply