தேங்காய் அரிசி பாயசம்

Loading...

%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி அல்லது சாதா அரிசி – 1/2 கப்
தண்ணீர் – 3 கப்
வெல்லம் – 1.5 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
தடித்த தேங்காய் பால் – 2 கப்
நெய் – 3 தேக்கரண்டி
முந்திரி – 2 தேக்கரண்டி
உலர் திராட்சை – 2 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
தேங்காய் துண்டுகள் – 2 தேக்கரண்டி

ஒரு ஜாரில் அரிசி எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் வெல்லம் எடுத்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். கடாயில் சிறிது நெய் ஊற்றி அரிசி சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து தண்ணீர் சேர்த்து கலந்து வேக விடவும். அதில் தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலக்கி வெல்லம் நீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி சிறிது ஏலக்காய் தூள் தூவி நன்றாக கலக்கவும். கடாயில் சிறிது நெய் உருக்கி, தேங்காய் துண்டுகள் சேர்த்து பின் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன் நிறமாக வதக்தி அதை பாயசத்தில் ஊற்றவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply