தால்

Loading...

தால்

பாசிப்பருப்பு – 1 பெரிய கப் (150 கிராம்),
கடலைப்பருப்பு – 1/2 கப் (50 கிராம்),
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய், நெய் – தலா 3 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை,
கரம்மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பொடித்த பச்சைமிளகாய், பச்சை கொத்தமல்லி – தேவைக்கு,
காய்ந்த மிளகாய் – 2, (விருப்பப்பட்டால்)
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – தலா 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 டீஸ்பூன்.

2 பருப்பையும் 1/2 மணி நேரம் ஊற வைத்து, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பதமாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் 1 டீஸ்பூன், நெய் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து சீரகம், காய்ந்த மிளகாய், சர்க்கரை, பெருங்காயம், கரம்மசாலா தூள், கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து வதக்கி இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது வதக்கி வெந்த பருப்பை சேர்த்து கொதிக்கவிட்டு, மல்லித்தழைத் தூவி இறக்கி பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு பிழிந்து வைக்கவும். பின் மீதி நெய்யை டாலின் மேல் ஊற்றவும்.

குறிப்பு:

கடலைப்பருப்பை மட்டும் ஊறவிட்டு அதிகம் குைழயாமல் பாசிப்பருப்புடன் வேக விடவும். இந்த தால்தான் பாட்டிக்கு (Bati) மிக முக்கியம். பாட்டியை நசுக்கி அதன் மேல் பருப்பை விட்டு ஒரு தட்டில் அல்லது பெளலில் தால் பாட்டி சூர்மா பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply