தலைமுடி உதிர்வதைத் தடுக்க வாரம் ஒருமுறை இத செய்யுங்க

Loading...

%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8dதலைமுடி உதிர்கிறது என்று பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட முடி பராமரிப்பு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில உணவுப் பொருட்களைக் கொண்டும் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம். முக்கியமாக சமையலறை உணவுப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பதால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் மிச்சப்படுத்தலாம். சரி, இப்போது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வலிமையை அதிகரிக்க உதவும் ஹேர் மாஸ்க்குகள் குறித்து காண்போம்.

ஒட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை பால் சேர்த்து, அத்துடன் பாதாம் எண்ணெய் சிறிது சேர்த்து கலந்து, முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள பொடுகு நீங்குவதோடு, மயிர்கால்களும் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.
அவகேடோ/வெண்ணெய் பழம் அவகேடோவில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, தலைமுடியை வலிமைப்படுத்துவது மட்டுமின்றி, வறட்சியின்றியும் வைத்துக் கொள்ளும். எனவே அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை மசித்து, அத்துடன் ஒரு முட்டையின் மஞ்சள் ககருவை சேர்த்து கலந்து, தலை முடியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட முடி புதுப்பிக்கப்படும்.
வெங்காயம் வெங்காய சாறு ஸ்கால்ப்பில் முடி உதிர்வதற்கு காரணமான கிருமிகளை அழித்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு வெங்காய சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்பட்டு, முடி நன்கு வளரும்.
கேரட் வெங்காய சாற்றினைப் போலவே, கேரட் சாறும் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, மயிர்கால்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்கும். எனவே கேரட்டை அரைத்து சாறு எடுத்து, 30 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, பின் அலச தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இவை தலைமுடியை வலிமைப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட முடிக்கு ஊட்டச்சத்தை வழங்கி புதுப்பிக்கும். அதற்கு ஒரு பௌலில் வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
கொய்யா இலை கொய்யா இலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை குளிர வைத்து, பின் அந்நீரால் தலைமுடியை அலசி வர, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply