தனிமை விரும்பிகளுக்கான ஆப்ளிகேஷன்கள்

Loading...

%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86தலைப்பை பார்த்தவுடன் ‘இன்றைக்கு யாருக்கு தான் ஆள் இல்லை’ என யோசிக்க வேண்டாம். எதிர் பாலினத்தவரோடு பழகும் வித்தை தெரியாவதவர்கள் இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.
இதற்கு உச்ச கட்ட சாட்சியாக இந்த செயலிகள் அமைந்திருக்கின்றது. இன்று வரை சிங்கிள் அந்தஸ்தோடு வாழ்பவர்கள் பயன்படுத்த வேண்டிய சில வித்தியாச அப்ளிகேஷன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

புத்திஃபை

தியானம் செய்வதன் அவசியம் இன்று பலருக்கும் தெரிவதில்லை, அதனால் பயனாளரின் மன நிலையை புரிந்து கொண்டு அவர்கள் செய்ய வேண்டிய தியான முறைகளை இந்த செயலி பரிந்துரைக்கின்றது.

சிம்சிமி

யாருடனாவது பேச வேண்டும் என்பவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளலாம். சிம்சிமி ஒரு சாட் ரூம் போன்று கலந்துரையாடல்களை மேற்கொள்ள வழி செய்கின்றது.

பேக்டாக் 2

சிம்சிமி போன்றே இந்த செயலியும் செயல்படுகின்றது. ஆனால் இதில் 3டி மூலம் அனிமேட் செய்யப்பட்ட உருவம் ஒன்ரு பேச்சை சுவாரஸ்யமாக மாற்றுகின்றது.
இடையே இந்த செயலியானது எமோஜி மற்றும் நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொள்ளும் என்பதால் இந்த செயலியின் முழு பதிப்பு இந்தியாவில் ரூ.135க்கு கிடைக்கின்றது.

ஹக்

இந்த செயலியை கொண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கட்டிபிடி வைத்தியம் கொடுக்க முடியும். மொபைல் போன் மூலம் எப்படி ஹக் செய்வது என குழம்ப வேண்டாம்.
ஹக் வரும் போது போனினை மார்பு பகுதியில் வைத்தால் போன் வைப்ரேட் ஆகும், இதனால் குறிப்பிட்ட நபர் கட்டிபிடித்த அனுபவத்தை எங்கிருந்தும் பெற முடியும்.

க்ளோக்

இந்த செயலி உங்களது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களை கவனித்து கொண்டு உங்களது காண்டாக்ட்கள் இருப்பதை எச்சரிக்கை செய்யும், இதனால் அவர்களை தவிர்த்து அமைதியை பெற முடியும். தற்காலிகமாக காதல் முறிவுற்றவர்களுக்கு இந்த செயலி பயன் தரும்.

ஸ்மார்ட்ஸ்பென்ட்ஸ்

இந்த செயலி உங்களுக்கு ஒர் கணக்கு பிள்ளை போன்று செயல்பட்டு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து அவ்வப்போது உங்களுக்கு நினைவூட்டும்.

லோன்லீ

இந்த செயலி உலகம் முழுக்க தனிமையில் வாடும் மக்களோடு இணைத்து அவர்களுடன் குறுந்தகவல் மற்றும் சாட் செய்ய வழி செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply