தக்காளி – ஜவ்வரிசி வடாம்

Loading...

%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி-1/2கப்
தக்காளி-2
எலுமிச்சம்பழம்-1
வரமிளகாய்-8
பெருங்காயத்தூள்-1/2டீஸ்பூன்
உப்பு-1/2டேபிள்ஸ்பூன்


செய்முறை

ஜவ்வரிசியை களைந்து முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
தக்காளி-மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறுஎடுத்து வைக்கவும்.
தக்காளி-மிளகாய் கலவையுடன் 4 கப் தண்ணீர் கலந்து அடிகனமான பாத்திரத்தில் வைத்து கொதிக்கவிடவும்.
தக்காளி கலவை நன்கு கொதிவந்ததும் ஜவ்வரிசியை நீரில்லாமல் வடித்து சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறிவிட்டு சுமார் 12-15 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
ஜவ்வரிசி வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு, உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, கலவையை வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவைக்கவும்.
அகலமான தட்டில் ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து நீர் தடவி தயாராக வைக்கவும். வடாம் கலவை கை பொறுக்கும் சூடுக்கு ஆறியதும் கரண்டியால் (அ) ஸ்பூனால் சிறிய வட்டங்களாக ஊற்றவும்.
(வடாம் கலவையை முழுவதும் ஆறவிட்டால் இறுகிவிடும். அப்படி ஆகிவிட்டால் சிறிது நீர் விட்டு கரைத்து வடாமாக இட்டுக்கொள்ளலாம்)
வடாம் ஓரளவு (1-2 நாட்கள், உங்க ஊர் வெயிலைப் பொறுத்து! :)) காய்ந்ததும் கவனமாக உரித்து எடுத்து திருப்பிவிட்டு நன்றாக காயவிடவும். வழக்கம்போல எனக்கு 2 நாட்களில் காய்ந்துவிட்டது.வடகமெல்லாம் நன்கு காய்ந்ததும் காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
ஜவ்வரிசி வடாமை எண்ணெயில் பொரிக்கும்போது கவனமாகப் பொரிக்கவேண்டும். சட-சடவென்று சத்தம் போட்டுக்கொண்டு பொரியும்..எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பும் உண்டு. ஜாக்ரதையாப் பொரிச்சு சாப்டுங்கோ!
தக்காளிப் புளிப்பு பத்தாதோ என்று எலுமிச்சைச்சாறு சேர்த்தேன், வடாம் கொஞ்சூண்டு புளிப்பா இருந்தது போல இருந்தது. அடுத்தமுறை தக்காளி மட்டும் சேர்த்து செய்து பார்க்கவேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply