ஜீப்ரானிக்ஸ் ஜுக் பார் ஸ்பீக்கரின் அறிமுகம்

Loading...

%e0%ae%9c%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9c%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8இந்தியாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப துணைப்பொருள்கள், நுகர்வோர் மின்னணுப் பொருட்கள் மற்றும் கண்காணிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜீப்ரானிக்ஸ், தனது சவுண்டு பார் ஸ்பீக்கரான ‘ஜுக் பாரில்’ ப்ளூடூத் அம்சத்தினைச் சேர்த்து அதனைப் புதுப்பித்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை ஒரு மெல்லிய மற்றும் கச்சிதமான வடிவமைப்பில் வழங்கியுள்ள ஜீப்ரானிக்ஸ் ஜுக் பார் அதனைச் சுற்றிலும் ஒழுங்கற்ற முறையில் காணப்படும் ஒயர்களின் தேவையின்றி சரவுண்டு சவுண்டு அனுபவத்தை வழங்குகிறது.
ஜீப்ரானிக்ஸ் ஜுக் பார் ஸ்பீக்கர் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது மேலும் அதன் மான்ஸ்டர் ஒலியின் காரணமாக அதன் நுகர்வோரிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த புதிய வகை ப்ளூடூத்தின் சௌகரியத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்பீக்கரின் விலை முன்பு இருந்ததைப் போல் ரூ. 5499/- மட்டுமே.
இந்த சவுண்டு மான்ஸ்டர் பார் ஸ்பீக்கர் உங்களது தொலைக்காட்சிக்கான மிகச்சிறந்த ஜோடியாகும். அது திரைப்படங்களுக்கும் இசைநிகழ்ச்சிகளுக்கும் வழங்கும் சரவுண்டு சவுண்டு உங்களது தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்திற்கு செறிவூட்டும். இந்த ஜுக் பார் ஸ்பீக்கர் கீழ்நோக்கி ஒலியெழுப்பும் சப்-வூஃபர் மற்றும் பாரில் நடுத்தர/உயர்தர டிரைவர்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கரின் மொத்த அவுட்புட் 49 வாட்ஸ் RMS ஆகும். இந்த ஸ்பீக்கர் 40hz-20khz என்ற எல்லைக்குள் ஒலியை அளிக்க வல்லதாகும்.
ஜுக் பார் ஸ்பீக்கர் மிகச்சிறந்த ஒலித் துல்லியத்திற்கும் மற்றும் அலைவரிசைக்கு ஏற்ப செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்களது திரைப்படம் பார்க்கும் மற்றும் இசை கேட்கும் அனுபவத்தை ஒரு முற்றிலும் புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும். இந்த ஸ்பீக்கர் வசீகரமான பளபளப்பான பேனல் அமைப்புடனும் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடனும் வருகிறது. இதன் சப்-வூஃபர் மேல்பக்க பேனல் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் அனைத்து கட்டுப்பாட்சு விசைகளையும் கொண்டுள்ளது, மேலும் இது முற்றிலும் ரிமோட் கன்ட்ரோலர் மூலமாகவும் செயல்படக்கூடிய வசதியுடன் வருகிறது.
உள்ளேயே பொருத்தப்பட்டுள்ள மூன்று வழி ஆம்பிளிஃபையரைக் கொண்ட இது நிறைய சக்தியையும், குறைவான பிசிறுகளையும் மற்றும் மிகத் தரமான ஒலியையும் வழங்குகிறது. பெரிய டிரைவர் உறுதியான குறைந்த நிலை மற்றும் சக்திமிக்க க்ரிஸ்ப் ஹைகளையும் வழங்குகிறது, இதன்மூலமாக இதைப் பயன்படுத்துபவர் எந்த கைபேசி, டேபிலட் அல்லது கணினியில் இருந்தும் ஒலியை இசைக்க அனுமதிக்கிறது. இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத், பென் டிரைவுகளுக்கான USB ஸ்லாட்டுகள், SD/MMC கார்டுகளுக்கான ஸ்லாட்டு, உள்ளேயே வடிவமைக்கப்பட்ட FM டியூனர் மற்றும் ஆக்ஸ்-இன் ஆகிய பல்வேறு வகையான இணைப்பு முறைகளைத் தேர்ந்தெடுக்கும் வசதியுடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது மேலும் முக்கிய கடைகளில் கிடைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply