செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் உடல்நல பாதிப்புகள்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அதில் இருந்து மக்களை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி அருகே நொய்டாவை சேர்ந்த நரேஷ் சந்த் குப்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சு மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம் உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் முதல் உயிருக்கு அச்சுறுத்தலான பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இது தொடர்பாக நிரூபிப்பதற்கான எண்ணற்ற விஞ்ஞான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் இது தொடர்பாக பின்பற்றப்படும் கடுமையான விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவை கணிசமாக குறைத்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை மனுதாரரிடம் இருந்து பெற்ற நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய தொலைத்தொடர்பு துறை, நொய்டா நிர்வாகம், மற்றும் நொய்டாவில் செல்போன் கோபுரங்கள் அமைத்த தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply