சுக்டி

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf
என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 1 கப்,
கட்டி இல்லாமல் பொடித்த வெல்லம் – 3/4 கப்,
நெய் – 1/2 கப்,
ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை – 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
வெள்ளரி விதை – சிறிது.

ஒரு தட்டில் சிறிது நெய் தடவி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்யை சூடு செய்யவும். நெய் சூடானவுடன் அடுப்பை சிம்மில் வைத்து கோதுமை மாவை போட்டு கைவிடாமல் வறுக்கவும். அடிபிடிக்காமல் பொறுமையாக குறைந்தது 7 முதல் 10 நிமிடங்கள் பொன் நிறமாகும் வரை வறுக்கவும். இப்பொழுது அடுப்பை பெரிதாக்கி ஒரு பிரட்டு பிரட்டியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
அதில் தாமதிக்காமல் பொடித்த வெல்லத்தை சேர்த்து 60 முதல் 70 செகண்டுகள் கிண்டவும். மாவு சூட்டில் வெல்லம் உருகி மொத்தமாக எல்லாம் சேர்ந்து உருண்டு வரும். வேர்க்கடலை, சிறிது ஏலக்காய் தூள் தூவி நெய் தடவிய தட்டில் விட்டு ஒரு கரண்டியால் சமப்படுத்தவும். வெள்ளரி விதை தூவி சமப்படுத்தலாம். 1 நிமிடம் கழித்து கத்தியால் துண்டு போடவும். ஆறிய பிறகு தட்டிலிருந்து எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply