சிம்பிளான கடாய் பன்னீர் | Tamil Serial Today Org

சிம்பிளான கடாய் பன்னீர்

Loading...

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%80%e0%ae%b0%e0%af%8d
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 200 கிராம் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு… எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் கிராம்பு – 4 பட்டை – 1 பூண்டு – 4 பற்கள் பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)


செய்முறை:
முதலில் பன்னீரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய்/வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பு தூவி 1 நிமிடம் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால், கடாய் பன்னீர் ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN