சாமை மசாலா ஸ்மூத்தி கஞ்சி

Loading...

சாமை மசாலா ஸ்மூத்தி கஞ்சிசாமை அரிசி – 1/4 கப்,
வறுத்த பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன்,
கலவை காய்கறிகள் – 1/2 கப் (பொடியாக அரிந்து கொள்ளவும்),
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுந்து – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது),
சின்ன வெங்காயம் – 7 (பொடியாக நறுக்கியது),
புதினா – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
கொத்தமல்லித்தழை – 1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது),
கறிவேப்பிலை – 10 இலை,
உப்பு-தேவைக்கு,

அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். கறிவேப்பிலை, உளுந்து, மிளகாய் சேர்த்து, உளுந்து சிவக்கும் வரை வதக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். சாமை அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். அனலை குறைத்து தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடம் சூடுபண்ணவும். புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். ஸ்மூத்தி கஞ்சி தயார்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply