சம்பா ரவை டிக்கி

Loading...

சம்பா ரவை டிக்கிசம்பா ரவை – 1/2 கப்,
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 3/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலையை கொர கொரப்பாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை சிறியதாக்கி, அரைத்த பருப்பு கலவையை சேர்க்கவும். சம்பா ரவை போட்டு உப்பு
சேர்த்து, அடுப்பை சிறிய தீயில் வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி வெந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். இந்தக் கலவையை சிறிது சிறிதாக எடுத்து தட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டுபுறமும் சிறிது மொறுமொறுப்பானவுடன் எடுத்து சூடாக சட்னி சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply