க்யூபன் லெமன் சுகர் குக்கீ

Loading...

க்யூபன் லெமன் சுகர் குக்கீகோதுமை மாவு – 3/4 கப்,
சர்க்கரை – 1/4 கப்,
வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
லெமன் ஜெஸ்ட் – 1 1/2 டீஸ்பூன்.
லெமன் ஜெஸ்ட் தயாரிக்க…
எலுமிச்சைப்பழத்தை நன்கு கழுவி, சுத்தமான துணியில் துடைத்துக் கொள்ளவும். பின்பு பழத்தின் தோலை கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.


எப்படிச் செய்வது?

வெண்ணெயை பீட்டர்/விஸ்க் கொண்டு அடித்து, சர்க்கரை சேர்த்து, நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். கோதுமை மாவு, லெமன் ஜெஸ்ட் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். 10 நிமிடம் மூடி வைத்த பின், 1/2 இன்ச் தடிமனில் சப்பாத்தியாகத் தேய்க்கவும். விருப்பமான வடிவத்தில் கட் செய்யவும். பேக்கிங் டிரேயில் 1/2 இன்ச் இடைவெளி விட்டு அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply