கொத்துமல்லி முந்திரி கட்லெட்

Loading...

%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d

தேவையானவை :-

முந்திரி – 40 பருப்பு
கொத்துமல்லி – 2 கட்டு
கடலை மாவு – 3 கப்
அவித்த உருளைக்கிழங்கு – 12
ப்ரெட் – 2 பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 2 இன்ச் துருவியது
பச்சை மிளகாய் – 5 பொடியாக நறுக்கியது
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
மைதா – 3 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் – 1 கோப்பை
எண்ணெய் பொரிக்கத் தேவையான அளவு.செய்முறை :-

கொத்துமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி பச்சை மிளகாய் வெங்காயத்தை வதக்கி கடலைமாவைப் போடவும்.
லேசாக வறுபட்டதும் கொத்துமல்லியைப் போட்டு கரம்மசாலா, மிளகாய்த்தூள் வெண்ணெயைப் போட்டு அரை டீஸ்பூன் உப்புப் போட்டு நன்கு புரட்டவும்.
வெந்து உருண்டதும் இறக்கி முந்திரியை உள்ளே வைத்து ஓவல் சைஸில் சின்ன சின்ன கட்லெட்டுகளாக செய்யவும்.
அவித்த உருளைக்கிழங்கில் ப்ரெட்டைப் போட்டு உப்பு மிளகாய்ப் பொடி போட்டு லேசாக நீர் தெளித்துப் பிசையவும்.
இதில் சிறிது எடுத்து எண்ணெய் தொட்டு கப் போல செய்து கொத்துமல்லி கட்லெட்டுகளை இதனுள் வைத்து நன்கு உருட்டவும்.
அதிகம் எண்ணெய் சேர்க்க வேண்டாம் என்றால் இதையே ப்ரட் க்ரம்ஸில் புரட்டி தோசைக்கல்லில் சுற்றி எண்ணெய் விட்டு எல்லாப் பக்கமும் புரட்டி வேகவைத்து எடுக்கவும்.
இல்லாவிட்டால் மைதாவில் உப்பு மிளகாய்த்தூள் போட்டுக் கரைத்து கட்லெட்டுகளை நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுக்கவும்.
இதில் சைஸ் பெரிசாக இருப்பதால் கணிசமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply