கேழ்வரகு அல்வா

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%beகேழ்வரகு – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 1 கப்,
முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் – சிறிது.

கேழ்வரகை நன்கு அலசி சுத்தம் செய்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த கேழ்வரகை மிக்சியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த கேழ்வரகை வெள்ளை துணி அல்லது நைசான பில்டரில் நன்கு வடிகட்டி பால் எடுக்கவும். வடிகட்டும் பொழுது நீர் சேர்த்து கசக்கி பிழிந்து பால் எடுக்கவும்.
எடுத்த பாலை ஒரு அகலமான பாத்திரத்தில் விட்டு மூடி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து பார்த்தால் பால் நன்கு தெளிந்து இருக்கும். மேலாக உள்ள தண்ணீர் பகுதியை கொட்டி விடவும். அடியில் உள்ள கெட்டியான பகுதியில்தான் அல்வா செய்ய வேண்டும். அடிகனமான கடாய் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து கேழ்வரகு பாலை விட்டு கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறினால் சிறிது நேரத்தில் மாவு வெந்துவிடும்.
அப்பொழுது சர்க்கரையை அதில் கொட்டி கிளறவும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் 3 டீஸ்பூன் சர்க்கரை போடவும். சர்க்கரை நெய்யில் பொன்னிறமாக கரையும் வரை வறுத்து காரமலைஸ் (Caramelize) ஆனவுடன் அல்வாவில் சேர்த்து கிண்டவும். இப்பொழுது அல்வாவுக்கு நல்ல நிறம் கிடைத்துவிடும். அவ்வப்பொழுது நெய் சேர்த்து கிளறி அல்வா நன்கு ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது எல்லா நெய்யையும் விட்டு பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் தூவி இறக்கவும். கோதுமை அல்வாவை விட குறைந்த நெய், சர்க்கரை போதும். அதைவிட எளிதாக கிளறி விடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply