கேரட் சோயா சூப்

Loading...

கேரட் சோயா சூப்
சோயா – 100 கிராம்,
துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சிபூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
மொத்த மசாலா – (தனியா, சோம்பு,
சீரகம், மிளகாய், மஞ்சள்) தலா – 1 டீஸ்பூன்,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – சிறிது,
வெங்காயம் – 1, தக்காளி – 1,
தேங்காய்ப்பால் – 1/2 டம்ளர்,
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – 1/2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1.

சோயாவை வெந்நீரில் ஊறவைத்து தண்ணீரை பிழிந்து வைக்கவும். குக்கரில் நல்லெண்ணெய் + நெய் ஊற்றி சூடுபடுத்தி அதில் பட்டை, கிராம்பு, ஏலம் சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, தக்காளி என ஒவ்வொன்றாக வதக்கவும். சோயா மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து உப்பு, மசாலா வகைகளை சேர்த்து நன்கு வேக விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply