குறட்டையை தவிர்ப்பதற்காக SNORE CIRCLE எனும் புதிய சாதனம்

Loading...

குறட்டையை தவிர்ப்பதற்காக SNORE CIRCLE எனும் புதிய சாதனம்குறட்டை என்பது பொதுவாக அதிக வேலைப் பழுவினால் ஏற்படும் களைப்பின் காரணமாக வருவதாகும். எனினும் தூங்கும்போது இது மற்றவர்களையும் தொந்தரவு செய்வதனால் விகாரத்து முதல் பல பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகின்றது.
எனவே குறட்டையை தவிர்ப்பதற்காக ஏற்கணவே சில சாதனங்களும், முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் வரிசையில் தற்போது Snore Circle எனும் புதிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது காதில் அணியக்கூடிய புளூடூத் ஹெட்செட் போன்ற வடிவத்தைக் கொண்டதாக காணப்படுகின்றது.
இச் சாதனமானது குறட்டை விட ஆரம்பிக்கும்போது சிறிய அதிர்வை உண்டாக்குகின்றது. குறித்த அதிர்வானது காது எலும்புகளின் ஊடாக பயணித்து மண்டையோட்டை அடைகின்றது பின்னர் அங்கு உணர்ச்சி நரம்புகளை தூண்டி குரல் வளைக்கு சமிக்ஞையை அனுப்புகின்றது.
இந்த சமிக்ஞையானது குரல் வளையிலுள்ள தசைகளை விரிவடையச் செய்து குறட்டை சத்தத்தின் அளவை வெகுவாக குறைவடையச் செய்கின்றது.
இச் சாதனம் 2012ம் ஆண்டளவில் உருவாக்கப்பட ஆரம்பித்த போதும் தற்போதே முழுமை பெற்றுள்ளது. இதன் விலையானது 129 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply