குடலை இட்லி

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf
தேவையான பொருட்கள்

இட்லி அரிசி/புழுங்கல் அரிசி -1கப்
பாசிப்பருப்பு -1/4கப்[தோலில்லாத உடைத்த மஞ்சள் நிற பச்சைப் பயறு]
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
நெய்-1/2டேபிள்ஸ்பூன்
மிளகு-7
சீரகம்-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-1
இஞ்சி-சிறுதுண்டு
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள்-1/8டீஸ்பூன்


செய்முறை

அரிசி-உளுந்து-பாசிப்பருப்பை நன்றாக களைந்து, அரிசி-உளுந்தை ஒன்றாகவும், பாசிப்பருப்பைத் தனியாகவும் ஆறு மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
அரிசி உளுந்தை கிரைண்டரில் அரைக்கவும். முக்கால் பாகம் அரைபட்டதும் பாசிப்பருப்பையும் சேர்த்து அரைத்தெடுக்கவும். தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து புளிக்க வைக்கவும்.
பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கவும்.
மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
நெய் காயவைத்து இவற்றை எல்லாம் வறுத்து (தேவையான அளவு மாவைத் தனியாக எடுத்து) மாவில் கலந்துகொள்ளவும்.
இட்லிப் பாத்திரத்தில் இட்லிகளை ஊற்றி வைத்து..
வேகவைத்தெடுக்கவும்.
சுவையான குடலை இட்லிகள் தயார். விருப்பமான சட்னி / சாம்பாருடன் ருசிக்கலாம்.
மீதமான ஒரு கரண்டி மாவை தாளிப்புக் கரண்டியில் தோசையாக செய்தேன், மொறு மொறு என்று சூப்பராக இருந்துச்சு

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply