காளான் சிக்கன் தொக்கு

Loading...

காளான் சிக்கன் தொக்கு
தேவையான பொருட்கள்
–சிக்கன் 1/2 கிலோ
குடை மிளகாய் – 150 கிராம்
காளான் – 100 கிராம்
சாம்பார் வெங்காயம் – 150 கிராம்
பச்சைமிளகாய் – 4
மிளகுத்தூள் இடித்தது – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பற்கள்

செய்முறை

* சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
* பின் நறுக்கிய குடைமிளகாய், காளான், சிக்கன் இவற்றை வதக்கவும்.
* தொடர்ந்து தட்டிய மிளகாய், இஞ்சி பூண்டு இவை சேர்த்து வதக்கவும்
* இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு நீர் சேர்த்து, பின்னர் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
* நன்கு வெந்தவுடன் மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply