காலை உணவுக்கு முன்னர் குடிக்க வேண்டிய சிறந்த நீராகாரங்கள்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81
தண்ணீர்

காலை எழுந்தவுடன் தண்ணீருடன் அந்த தினத்தை தொடங்குவது சிறப்பு. இது வளர்ச்சிதை மாற்றத்தை 25% வரை வேகப்படுத்த உதவுகிறது. குறைந்தபட்சம் 500 மில்லி நீராவது பருகுங்கள்.

எலுமிச்சை நீர்

தண்ணீரில் எலுமிச்சை நீரை கலந்து காலை எழுந்ததும் பருகுங்கள். இது உடல் உறுப்புகள் சுறுசுறுப்புடன் இயங்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமிளிக்கும்.

பூண்டு நீர்

பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடியுங்கள். வெறும் வயிற்றில் இதை பருகுவது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, கல்லீரல் செயலாற்றல் சிறக்கவும் உதவுகிறது.

மஞ்சள் நீர்

தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து பருகுவதால் ஆண்டி-ஆக்சிடன்ட்ஸ் உடலில் அதிகரிக்கிறது. மேலும், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையவும் இது பயனளிக்கிறது.

கிரீன் டீ

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் உடலில் புத்துணர்ச்சி அதிகமாக காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகுங்கள்.

இஞ்சி டீ

காலையில் எழுந்ததும் சூடாக ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. இதிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் மக்னீசியம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

சிறுநீரகத்தின் செயல்பாடு சிறக்க, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க, செரிமானத்தை ஊக்குவிக்க தினமும் காலை உணவருந்தும் முன்பு உருளைக்கிழங்கு ஜூஸ் பருகுங்கள்.

கிரீன் ஜூஸ்

உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்க ஓர் சிறந்த வழி, காலை எழுந்ததும் வைட்டமின், மினரல்ஸ் நிறைந்த காய்கறி கிரீன் ஜூஸ். இது உங்கள் உடலுக்கு தேவையான உடற்சக்தியை தரவல்லது.
பெட் காபி குடிப்பதற்கு பதிலாக, இந்த நீராகாரங்களை தினமும் காலை எழுந்தவுடன் குடித்து வாருங்கள். உடற்சக்தி அதிகரிக்கும். சிறுநீரக செயல்பாடு, செரிமானம், இரத்த ஓட்டம் போன்றவை பன்மடங்கு அதிகரிக்கும்.
எலுமிச்சை நீர், பூண்டு நீர், மஞ்சள் நீர், கிரீன் டீ போன்ற சில நீர் பானங்களை காலை உணவு உண்ணும் முன்னதாக குடிப்பதால் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply