காலாண்டில் 6.44 பில்லியன் டொலர்கள் என வருமானத்தை வெளியிட்ட பேஸ்புக்

Loading...

காலாண்டில் 6.44 பில்லியன் டொலர்கள் என வருமானத்தை வெளியிட்ட பேஸ்புக்தற்போதைய இணைய உலகை மட்டுமின்றி மக்களையும் ஆட்டிப் படைக்கும் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் 2016ஆம் ஆண்டிற்கான இரண்டாம் காலாண்டுப் பகுதிக்கான வருமானத்தை தற்போது வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமார் 6.44 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வருமானம் ஆனது கடந்த வருடம் இதே காலப் பகுதியில் ஈட்டப்பட்ட வருமானத்திலும் பார்க்க 59 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தவிர தற்போது மொபைல் சாதனங்கள் ஊடாகவே அதிக பயனர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்தி வருவதாகவும், இவ் எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விடவும் 76 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply