கார் போன்ற சிறிய வகை விமானம் விரைவில் சந்தையில்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%beகார்களைப் போன்று எல்லோரும் பயன்படுத்தக்கூடிய சிறிய வகை விமானத்தை ஜேர்மனியைச் சேர்ந்த “லிலியம்’ என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது.
குறித்த விமானத்தை வீட்டு மின்சாரத்தில் மின்னேற்றம் செய்து கொண்டு, இரண்டு பேருடன் 500 கிலோ மீற்றர் வரை பறந்து செல்லக்கூடியவாறும் இந்த விமானத்தை நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக மேலே கிளப்பவும், நினைத்த இடத்தில் செங்குத்தாக கீழே இறக்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
இதுகுறித்து “லிலியம்’ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டேனியல் வீகண்ட் கூறியதாவது:
சாதாரண மக்களின், அன்றாடத் தேவைக்காகப் பயன்படுத்தக் கூடிய விமானத்தை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள்.
நாங்கள் உருவாக்கும் விமானங்களுக்கு, விமான நிலையங்களின் சிக்கலான, செலவு பிடிக்கும் உட்கட்டமைப்பு தேவை அமையாது வீட்டில் இருக்கும் சிறிய இடத்திலிருந்தே அந்த விமானத்தை பறக்கச் செய்யவும், தரையிறக்கச் செய்யவும் இயலும் வகையில் அந்த விமானத்தை வடிவமைத்து வருகிறோம்.
விமானத்தில் இருந்து வெளியேறும் சத்தத்தை குறைக்க, சாதாரண விமான என்ஜின்களுக்குப் பதிலாக மின்சார என்ஜின்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தொடுதிரை கட்டுப்பாட்டு அமைப்பு, தரையிறங்கும் போதும், கிளம்பும் போதும் நீண்டு மடங்கும் சக்கரங்கள், இறக்கை போல் உயர்ந்து இறங்கும் கதவுகள், ஏராளமான இட வசதி, வீட்டு மின்சாரத்திலும் கூட மின்னேற்றம் செய்யக்கூடிய மின்கலன் (பேட்டரி) ஆகிய அம்சங்களை எங்கள் விமானம் கொண்டிருப்பது சிறப்பாகும்.
எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடிய அந்த விமானங்கள், ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 500 கி.மீ. வரை பறக்கும் திறன் கொண்டவையாக இருக்கும்.
“லிலியம்’ நிறுவனம் உருவாக்கி வரும் விமானத்தின் மாதிரி வடிவம் சோதிக்கப்பட்டு வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply