காயங்களை குணப்படுத்த ரோபோக்கள் | Tamil Serial Today Org

காயங்களை குணப்படுத்த ரோபோக்கள்

Loading...

காயங்களை குணப்படுத்த ரோபோக்கள்தசை இடர்பாடுகளிலிருந்து விடுபடும் பொருட்டு ஏற்படும் காயங்கள், விகாரங்களை குணப்படுத்துவதற்காக ஒரு ரோபோ ஒன்று சிங்கப்பூர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரக் கையானது விளையாட்டு நிகழ்வுகளின் போது ஏற்படும் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவும் என சொல்லப்படுகிறது.
இது பற்றி Chinese physician Zhang கூறுகையில், வடிவமைக்கப்பட்ட இந்த திருத்தமான ரோபோவானது, நோயாளர்களில் தானாக சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடியது என்கிறார்.
மேலும் இதுவே வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ என்றும் சொல்லப்படுகிறது.
இந்த ரோபோவானது 6 அச்சுக்களாலான இயந்திரக் கைகளைக் கொண்டுள்ளது. இதனால் தெளிவான அசைவுகளை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது.
அத்துடன் பார்வைக்காக 3D-stereoscopic கமராவினைக் கொண்டுள்ளது.
நோயாளியின் பாதுகாப்பிற்கும், சௌகரியத்துக்குமென அமுக்க உணரிகள் முதல் பலவகையான உருக்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது முதல்கட்டமாக 50 நோயாளிகளில், வேறுபட்ட சூழ்நிலைகளில் பரிசீலிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN