கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும் காபி

Loading...

கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும் காபிஅவுஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக இரைப்பை மருத்துவர் அலெக்ஸ் ஹாட்ஜ் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காபி குணமாக்குமா என்ற நோக்கில் ஆய்வு நடத்தினார்.
ஹெப்படைட்டிஸ் சி, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் மதுப்பழக்கத்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றால், பாதிப்புக்கு உள்ளான ஆயிரத்து நூறு நோயளிகளிடம் ஒவ்வொரு நாளும் மூன்று காபி குடிக்க வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த நோயாளிகளில் முக்கியமாக ஹெப்படைட்டிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் கல்லீரல் சீரடைந்ததாக தெரியவந்தது. எனினும் காபியின் எந்த மூலக்கூறு கல்லீரலின் முன்னேற்றத்துக்கு காரணம் தெரியவரவில்லை என்று அலெக்ஸ் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply