கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாற்றின் பயன்கள்

Loading...

கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாற்றின் பயன்கள்நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது.
எனவே நம் உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து விடுபடவும் பூண்டு, கற்றாறை சாற்றை ஜூஸாக செய்து குடிக்கலாம்.
இதற்கு கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிதளவு தண்ணீர் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை அரைக்க வேண்டும்.

இந்த ஜூஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.

எனவே இந்த ஜூஸை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் குடித்து வந்தால், எண்ணற்ற பயன்களை நாம் பெறலாம்.
பயன்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். நோய்த்தொற்றுகள் மற்றும் உட்காயங்கள் குறைந்து சைனஸ் போன்ற பிரச்சனை சரியாகும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புச் செல்களை கரைத்து, உடல் எடை வேகமாக குறைய உதவுகிறது. உடலில் உள்ள புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, அடிக்கடி காய்ச்சலை உண்டாக்கும் நோய்த் தொற்றுகளை அழித்து, காய்ச்சல் வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடச் செய்கிறது. மூளை ஆரோக்கியம் அடைந்து அல்சைமர் போன்ற ஞாபக மறதி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply