கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் பிஸ்கட்டுகள்

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9fலேசாக பசி எடுத்தாலே பிஸ்கெட் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம். ஏனெனில் பசி அடங்குவதோடு சுவையாகவும் இருக்கும் என்பதாலேயே நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை பெண்கள் சாப்பிடுகின்றனர்.
ஆனால் இதுபோன்று பிஸ்கெட் மற்றும் கேக் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 60000த்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க்கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது.
ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என்ற ரீதியிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1987 ஆம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் வாழ்க்கை முறை, உணவு, எடை போன்றவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல் பத்தாண்டுகள் கழித்து அவர்களிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 729 பெண்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை என்று கூறும் இந்த ஆய்வு பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை உண்பதால் புற்றுநோய் வாய்ப்பு 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் 6,400 பெண்களுக்கு கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது என்றும் இதில் 1,000 பேர் மரணமடைவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பெண்களை அதிகம் பாதிப்பது கருப்பை புற்றுநோயும், மார்பகப்புற்றுநோயும்தான் ஆனால் பிஸ்கெட், கேக் சாப்பிட்டால் கருப்பை புற்றுநோய் வரும் என்று பீதியை கிளப்பியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வு மற்ற ஆய்வுகளின் முடிவுகளுடன் ஒத்துப் போகுமென்றால் கவலையளிக்கும் ஒரு ஆரோக்கியப் பிரச்ச்னையாகி விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply