கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

Loading...

%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b0%e0%af%8a

தேவையான பொருட்கள் :

கம்பு மாவு – 200 கிராம்,
உப்பு – தேவைக்கு,
கரகரப்பாக திரித்த மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
பாலக்கீரை – 1 கப்,
பச்சைமிளகாய் – 1,
வெங்காயம் – 1,
நெய் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – 1/4 கப் + தேவைக்கு,செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், பாலக்கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கம்பு மாவை லேசாக வறுத்து, அதில் மிளகுத்தூள், பாலக்கீரை, ப.மிளகாய், வெங்காயம், உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
* பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரித்து, ஒரு தட்டில் ஈரத்துணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரொட்டியை போட்டு சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி தட்டிய ரொட்டியை இட்டு இருபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து எடுக்கவும்.
* நெய் வேண்டாமெனில் ஆலிவ் ஆயில் தடவி சுட்டு எடுக்கவும்.
* சுவையான கம்பு பாலக் கீரை ரொட்டி ரெடி.


குறிப்பு:
சரியான பதம் வரவில்லை என்றால் அதில் சிறிது ரவை அல்லது அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply