கண்டுபிடிக்கப்பட்ட சிங்கத்தின் உப இனம்

Loading...

கண்டுபிடிக்கப்பட்ட சிங்கத்தின் உப இனம்காட்டு ராஜாவாகக் கருதப்படும் சிங்கத்தின் ஒரு உப இனம் இப்பூமியில் வாழ்ந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் போது விலங்கு ஒன்றின் படிமத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதனை ஆய்வு செய்ததில் மைக்ரோ லயன் (நுண் சிங்கம் – Micro Lion) எனும் ஒரு விலங்கினுடைய படிமம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மைக்ரோ லயன் ஆனது சிங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தது (Thylacoleonidae) எனவும், இது மரக் கிளைகளிலேயே அதிகம் வாழக்கூடியது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் எடை வெறும் 600 கிராம்களாக இருந்திருக்கலாம் எனவும் ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த விலங்கினம் 19 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், தற்போது முற்றாக அழிவடைந்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த படிமம் ஆனது அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் வட மேற்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply