கணனியின் உதவியுடன் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா

Loading...

%e0%ae%95%e0%ae%a3%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1ஒரு காலத்தில் மனித குலத்தை கிலி செய்த நோயாக எய்ட்ஸ் காணப்பட்டது. இந்நோயானது தற்போதும் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு நடவடிக்கைகள் ஊடாக ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது.
இந் நிலையில் தற்போது உயிரைப் பறிக்கும் மற்றுமொரு நோயாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது.
இந் நோயை பூரணமாக குணப்படுத்த உரிய மருத்துவமுறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும் ஆராய்ச்சிகளின் ஊடாக நோயை தவிர்க்க கூடிய வழிமுறைகள், தற்காலிக நிவாரணி முறைகள் என்பன உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படியிருக்கையில் அடுத்த 10 வருடங்களில் கணனியின் உதவியுடன் புற்றுநோயை முற்றாக குணப்படுத்தும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுவிடும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக DNA எனப்படும் பரம்பரை அலகினைக் கொண்ட மிகவும் சிறிய கணனிகள் (Ultra Small) உருவாக்கப்பட்டு அவை மனித உடல்களில் நிறுவப்படும்.
இக் கணனிகள் புற்றுநோய் கலங்களை அவதானிப்பதுடன் பாதிக்கப்பட்ட கலங்களிலுள்ள DNA களை மீண்டும் ஆரோக்கியமுள்ள கலங்களாக மாறக்கூடிய வகையில் புரோகிராம் செய்யும்.
இச் செயன்முறையின் ஊடாக புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என அந் நிறுவனம் விளக்கியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN