கட்டா மிட்டா முரப்பா

Loading...

கட்டா மிட்டா முரப்பாபுளிப்பான மாங்காய் பெரியது – 1 கிலோ,
சர்க்கரை – 1 1/2 கிலோ,
தண்ணீர் – 2 லிட்டர்,
சிட்ரிக் அமிலம் – 1 1/2 டீஸ்பூன்.

மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும். பின் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணி நேரம் வேகவிடவும். சிறிது கிளறி பின் மீண்டும் மாங்காயை இந்த பாகில் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.

குறிப்பு:

துண்டுகளின் மேல் பாகு இருக்க வேண்டும். இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும். புளிப்பும், இனிப்புமாக இருக்கும். சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.

இரண்டாவது வகை…

மாங்காய், சர்க்கரை வேகும்போது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், கருஞ்சீரகம் (கறுப்பு சீரகம்), உப்பு தேவைக்கு சேர்த்து முரப்பா செய்யவும். வருடக்கணக்கில் இருக்கும்.

குறிப்பு:

இந்த முரப்பா நாண், ரொட்டி, புல்கா, புரோட்டா, பூரியுடன் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply