கடலைப் பருப்பு பக்கோடா

Loading...

கடலைப் பருப்பு பக்கோடா
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பு – 1 கப்,
சின்ன வெங்காயம் – 200 கிராம்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 4 பல்,
புதினா, கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – தலா சிறிதளவு,
சோம்பு – அரை ஸ்பூன்,
உப்பு – சுவைக்கேற்ப,
எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

* வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து நசுக்கிக் கொள்ளுங்கள்.
* சோம்பைப் பொடித்துக்கொள்ளுங்கள்.
* கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி, நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறிது சிறிதாக எடுத்து போட்டு வேக விட்டு பொரித்து எடுக்கவும்.
* சுவையான கடலைப் பருப்பு பக்கோடா ரெடி.
* இதை சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கும் காரக்குழம்பு, மோர்க்குழம்பில் போடுவதற்கும் ஏற்ற பக்கோடா இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply