ஓட்ஸ் மசாலாபாத்

Loading...

%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8dஓட்ஸ் – 3 கப்,
தண்ணீர் – 4 1/2 கப்,
வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, குடைமிளகாய் (பொடியாக நறுக்கியது) – தேவையான அளவு,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது,
சாம்பார் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
முந்திரி – 5,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்,
தாளிக்க – கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு சிறிது,
உப்பு-தேவைக்கு,
பச்சைமிளகாய் – 2 (கீறியது).

வெறும் கடாயில் ஓட்ஸை வாசனை வரும்வரை வறுத்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் தாளிக்கவும். சிவந்ததும் அனைத்து காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் தூள் போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும். 4 1/2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வறுத்த ஓட்ஸை சேர்த்து கிண்டவும். கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து மல்லித்தழை தூவி, எலுமிச்சைச்சாறு பிழியவும். நெய்யில் முந்திரி வறுத்து சேர்க்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply