ஓட்ஸ் கோதுமை ரவை பணியாரம்

Loading...

ஓட்ஸ்  கோதுமை ரவை பணியாரம்

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 1 டம்ளர்
பச்சரிசி மாவு – 1 டம்ளர்
கோதுமை ரவை – 1/4 கப்
தயிர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவுதாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1/2 இணுக்கு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2


செய்முறை :

* ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸையும், கோதுமை ரவையையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
* அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசி மாவையும் சேர்க்கவும்.
* இவற்றுடன் தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* குழிப்பணியாரச்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.
6. வெந்த பிறகு திருப்பிப் போடவும்
* சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார்.
* மிளகாய்ப்பொடி, புதினா சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply