ஓட்ஸ் கோதுமை ரவா இட்லி

Loading...

%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf
தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 500 கிராம்
ஓட்ஸ் – 200 கிராம்
சிவப்பு அவல் – 50 கிராம்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – இரண்டு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – இரண்டு டீஸ்பூன்
முந்திரி – 15
கொத்தமல்லித்தழை – 20 கிராம்
துருவிய கேரட் – 50 கிராம்
உப்பு – ஒரு டீஸ்பூன்
சோடா உப்பு – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – 250 மில்லி லிட்டர்


செய்முறை:

* அவலை நன்றாகக் கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரியைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
* மற்றொரு வாணலியில் கோதுமை ரவையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
* ஊற வைத்த அவல், ஓட்ஸ், வறுத்து வைத்திருக்கும் ரவை, பொன்னிறமாக வறுத்த பருப்புகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
* இத்துடன் உப்பு, சோடா உப்பு, துருவிய கேரட், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலக்கி அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* இட்லி சட்டியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் கரைத்து வைத்த மாவை ஊற்றி 8 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான ஓட்ஸ் கோதுமை ரவா இட்லி ரெடி.
* இட்லியுடன் தக்காளி சட்னி அல்லது புதினா சட்னியைச் சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply