ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய தகவல்

Loading...

%e0%ae%90%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95அப்பிள் நிறுவனம் தனது ஐபோன்(iPhone), மக்புக் (MacBook) மூலம் பல புதிய தொழிநுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படித்தியுள்ளது.
அப்பிள் கருவிகள் பாவனைக்கு மிகவும் எளிய வடிவிலும் மக்களின் தேவைகளை சரிவர பூர்த்திசெய்யும் அளவிலும் இருக்கும், இதுவே அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
இன்னிறுவனம் இப்போது தனது ஐபோன், ஐபாட், இதர கருவிகளுக்கும் புதிய ஐஓஎஸ் 10 (IOS 10) இயங்குதளத்தை வெளிவிட்டிருக்கின்றது, மற்றும் ஐபோன் 7, புதிய மணிக்கூடு என்பனவும் சந்தைக்கு விரைவில் வருகின்றன.
இந்த ஐஓஎஸ் 10 இல் பல மாற்றங்களுடன் “கொண்டினுயூட்டி” (continuity) இலும் பல மாற்றங்களை செய்துள்ளது.
continuity என்பது உங்களிடம் அப்பிள் கருவிகள் இருந்தால்.. உதாரணமாக உங்கள் ஐபாட் இல் ஒரு மின்னஞ்சலை அடித்துவிட்டு அதன் தொடர்ச்சியை உங்கள் ஐபோனிலோ, அப்பிள் மடிக்கணனியிலோ அடித்து முடிக்கலாம்.
அதேபோல் ஐபோலில் ஒரு இணையத்தை பார்த்துவிட்டு அதே தொடர்சியை உங்கள் ஐபாட்டில் பார்க்கலாம், இதற்கு நீங்கள் செய்யவேண்டியது continuity ஐ உங்கள் அப்பிள் கருவிகளில் ஓன் செய்வது மட்டும் தான், இது ஒரு கண்கட்டி வித்தைபோல நிகழும்.
இந்த continuity ற்கு தற்போது புதிதாக வந்திருப்பதுதான் “universal clipboard” அதாவது, கொப்பி பேஸ்ட் (copy & past) எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
இதை நாம் இதுவரை ஒரே கருவியில் தான் செய்திருக்கின்றோம். அதாவது உங்கள் ஐபோனில் ஒரு மெசேஜை கொப்பி செய்து அதே ஐபோனில், வேறு ஒரு இடத்தில் பேஸ்ட் செய்திருக்கின்றோம், ஆனால் இப்போது உங்கள் ஐபோனில் கொப்பி செய்த ஒன்றை உங்கள் ஐபாட்டிலோ, மக்புக்கிலோ பேஸ்ட் செய்ய முடியும்.
அதாவது அங்க வச்சிட்டு இங்கே தேடுவது, இது படங்கள், எழுத்துக்கள் போன்ற எல்லாத்துக்கும் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply