ஐபோன்களில் 128GB 256GB சேமிப்பு வசதி

Loading...

ஐபோன்களில் 128GB, 256GB சேமிப்பு வசதிஅப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையான iCloud சேவையில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதாவது தனது வாடிக்கையாளர்களுக்கான சேமிப்பு வசதியினை 2TB வரை அதிகரிப்பு செய்துள்ளது.
இதற்கு மாதாந்த கட்டணமாக 19.99 அமெரிக்க டொலர்களை அறிவிடவுள்ளது.
இதற்கு முன்னர் 1TB சேமிப்பு வசதி வரை வழங்கப்பட்டிருந்ததுடன், மாதாந்தக் கட்டணமாக 9.99 டொலர்கள் அறவிடப்பட்டிருந்தது.
அடுத்த இரு வாரங்களுக்குள் அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 மற்றும் 7 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்யவுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டே ஒன்லைன் சேமிப்பு நினைவகத்தின் வசதியும் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ஐபோன்களில் 128GB, 256GB சேமிப்பு வசதி தரப்படவுள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN