ஐந்தே நாட்களி்ல் முகப்பரு தொல்லையில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்

Loading...

%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0முகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம்.

இந்த வகை சருமத்தினர் பல சரும பிரச்சனைகளை எதிர் கொள்வார்கள். அதில் முதன்மையானது தான் முகப்பரு. ஆனால் முகப்பரு வருவதற்கான காரணம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
ஒருவருக்கு முகப்பரு அதிகம் வருமாயின் அவர்களது சரும அழகே பாழாகியிருக்கும். இதனால் எந்த ஒரு விழாவிற்கும் பொலிவான முகத்துடன் செல்ல முடியாது.
இப்படி தொல்லைத் தரும் முகப்பருக்களை ஐந்தே நாட்களில் எளிதில் போக்க முடியும் என்பது தெரியுமா? இங்கு அதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன


முதல் நாள்

முதல் நாள் வீங்கியுள்ள முகப்பருவின் வீக்கத்தையும், வலியையும் ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் ஒரு காட்டன் துணியில் 3-4 ஐஸ் கட்டிகளை வைத்து, பரு உள்ள இடத்தில் ஐஸ் கட்டி கரையும் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்வதால், பருக்களினுள் இருக்கும் வெள்ளை நிற சீழ் இறுகுவதோடு, முகப்பருவின் அளவும் குறையும்.


இரண்டாம் நாள்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியை போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைக்கவும்.
பின் ஒரு ஈரத்துணியை எடுத்து, முகத்தின் மேல் ஒரு நிமிடம் வைத்து, பின் கலந்து வைத்துள்ள சந்தன கலவையை முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வர, பருக்கள் வேகமாக மறையும்.


மூன்றாம் நாள்

ஒரு பௌலில் கற்றாழை ஜெல், துளசி இலை பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் நன்கு கொதிக்கும் நீரில் 1 டேபிள் ஸ்பூன் டெட்டால் சேர்த்து கலந்து, காட்டன் துணியை அந்த நீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை முகத்தின் மேல் வைத்து எடுக்கவும்.
பின் கற்றாழை ஜெல் கலவையை எடுத்து முகத்தில் தடவி, மெதுவாக விரல்களால் 3 நிமிடம் மசாஜ் செய்து, மீண்டும் ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யவும்.


நான்காம் நாள்

நான்காம் நாளில் வேப்பிலையை பேஸ்ட் செய்து, அத்துடன் 1 டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பருவில் உள்ள கிருமிகள் முழுமையாக அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.


ஐந்தாம் நாள்

1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரில், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி முகத்தை தினமும் 3-4 முறை துடைத்து எடுக்க வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவை முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு பருக்களின்றி காணப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply