எள் சாதம்

Loading...

%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d
தேவையானவை

உதிராக வடித்த சாதம் – 2 கப்
கடுகு 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

பொடிக்க:

எள் – 4 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்


செய்முறை:

எள்ளை வெறும் கடாயில் போட்டு, பொரியும்படி வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும் .
ஆற வைத்து எள் உட்பட வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் நைஸாக பொடித்து கொள்ளவும்.
பின் மற்றாரு கடாயில் நெய்யில் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து சாதத்தில் எள் பொடி, உப்பு ஆகியவற்றைத் தூவி, கடுகு தாளிதத்தை சேர்த்துக் நன்கு கிளரவும்
சுவையான சத்தான எள் சாதம் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply