எலி வாலை குதிரை வாலாக மாற்றும் வெந்தய மாஸ்க்

Loading...

எலி வாலை குதிரை வாலாக மாற்றும் வெந்தய மாஸ்க்வெந்தயத்தை நாம் பாரம்பரியமாக உணவு மற்றும் அழகிற்காக உபயோகப்படுத்துகிறோம். குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் இரும்பு சத்தும், தாது சத்துக்களும் அதிகம் உள்ளது. இதை நாம் மட்டுமல்ல, துருக்கி, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாட்டினரும் வெந்தயத்தை அதிகளவு உபயோகிக்கின்றனர்.

வெந்தயம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும். முடி அடர்த்தியாக இல்லையே என கவலைப்படுபவர்கள் தொடர்ந்து 15 நாட்களுக்கு வெந்தயத்தை தலையில் போட்டு குளித்துவந்தால், ஒரு மாதத்திலேயே மாற்றம் காண்பீர்கள். நல்ல அடர்த்தியுடன் வளரும். அத்தனை சக்தி கொண்டது வெந்தயம். வெந்தயத்தில் மாஸ்க் தயாரித்து அதனை தலையில் வாரம் இருமுறை போட்டு வாருங்கள். நீங்களே வியக்கும் வகையில் உங்கள் கூந்தல் அடர்த்தி பெற்று, மென்மையாக மாறும். அந்த மாஸ்க் எப்படி தயாரிக்கலாமென பார்க்கலாம்.

வெந்தய மாஸ்க் :

வெந்தயம் – ஒரு கப்
யோகார்ட் – கால் கப்
ஆலிவ் எண்ணெய் – கால் கப்
இரவில் வெந்தயத்தை ஊற வைத்து, மறு நாள் அரைத்துக் கொள்ளுங்கள். யோகார்ட்டிலுள்ள நீரை வடிகட்டி அகற்றிவிட்டு கெட்டியான யோகார்ட்டையும், ஆலிவ் எண்ணெயையும் வெந்தயத்துடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலையின் ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தேய்த்து, ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் உடல் முழுவதும் வடிவதை தவிர்க்கலாம்.
1 மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது ஊற விடுங்கள். சைனஸ் தொல்லை இருப்பவர்கள் 15 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இவற்றுடன் சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை கலந்து கொள்ளலாம். பின்னர் வழக்கம் போல தலையை அலசவும். இதனை தொடர்ந்து செய்து பாருங்கள். முடி வளர்ச்சி அதிகரித்து, அடர்த்தி உண்டாகி, கூந்தல் அரோக்கியமாய் பளபளப்பது உறுதி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply