எகிறும் APPLE WATCH 2

Loading...

%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-apple-watch-2அப்பிள் நிறுவனம் தனது புதிய Apple Watch 2 சாதனத்தை iPhone7 வெளியிடும் அதே நேரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்பிள் நிறுவனம் வெளியிடும் iPhone 7 மற்றும் iPhone 7 Plus போன்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனது புதிய Apple Watch 2 சாதனத்தையும் iPhone7 வெளியிடும் நேரத்திலே அறிமுகப்படுத்த அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வெளிவரவிருக்கும் Apple Watchன் எதிர்பார்ப்பு நினைத்ததை விட அதிமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் 2 மில்லியன் Apple Watchயை தயாரித்து அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல் Apple Watchன் விற்பனை மந்தமாகவே இருக்கும் நிலையில்,வெளிவரவிருக்கும் Apple Watch 2 தற்போது இருப்பதை விட சிறப்பானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் Apple Watch 2-ன் வடிவமைப்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும், புதிய வன்பொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply