உளுந்தங்களி

Loading...

%e0%ae%89%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bfஉளுந்து மாவு – 1 கப்,
கருப்பட்டி – 1 கப்,
நல்லெண்ணெய் – 50 மி.லி.,
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்.

தோலுடன் இருக்கும் கருப்பு உளுந்தை மிக்சியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். கருப்பட்டியை தட்டி பொடியாக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 ½கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கருப்பட்டி சேர்த்து கொதிக்க விடவும். கரைந்தவுடன் அக்கரைசலை வடிகட்டி மற்றொரு அடி கனமான கடாயில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் பொழுது 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
கொதித்தவுடன் (பாகுபதம் வேண்டாம்) அடுப்பை நல்ல சிம்மில் வைத்து உளுந்து மாவை பரவலாக தூவவும். மாவு கட்டி தட்டாமல் கிளறவும். சுருண்டு கெட்டியாகி வரும்பொழுது சுக்குப் பொடி, மீதியுள்ள நல்லெண்ணெயை சேர்த்து கிண்டி உருட்டும் பதம் வரும்பொழுது இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply