உதட்டை சரியாக பராமரிக்கும் இயற்கை முறை

Loading...

%e0%ae%89%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும்.
அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அவை.
* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.
* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள் இருந்தால் அவை சரியாகிவிடும்.
* உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, தினமும் இரவில் படுக்கும் முன்பு, மில்க் க்ரீமை உதட்டில் தடவ வேண்டும்.
* ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால், வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.
* கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply