உடல் வறட்சி ஏற்படுவதற்கு காரணங்கள்

Loading...

உடல் வறட்சி ஏற்படுவதற்கு காரணங்கள்மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது.
இவ்வாறு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக விளங்கும் தண்ணீர், உடலிலிருந்து அதிகமாக வெளியேறும்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
அதிகமாக உடலில் இருந்து நீர் வெளியேறுவதற்கு Dehydration என்று பெயர்.
நாம் குடிக்கும் தண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் போன்றவற்றின் மூலம் வெளியேறுகிறது.
ஆனால், தண்ணீர் அதிகமாக வெளியேறும்போது உடல் வறட்சி அடைந்து மரணம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
காரணங்கள் அதிக நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது. வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுக்கள் காரணமாக அதிகமான சிறுநீர் வெளியேறுதல். நீரிழிவு போன்ற நோய்கள் காரணமாக நீர்ப்போக்கு ஏற்படுதல். உணவு மற்றும் நீரினை சரியான முறையில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது. அதிக உடல் உஷ்ணம். மதுபானங்களை அதிகமாக குடித்தல். வெப்பமான பகுதிகளில் அதிக நேரத்தை செலவிடுவது. உடல்நலக்குறைவு.அறிகுறிகள் அதிகமான தாகம் எடுத்தல். வாய் உலர்ந்து போதல் மற்றும் நாக்கு வீக்கமாக இருத்தல். உடல் பலவீனமாக இருத்தல். மயக்க உணர்வு. படபடப்பாக இருத்தல் (இதயம் படுவேகமாக செயல்படுவது போன்ற உணர்வு) குழப்பம். தாங்க முடியாத வியர்வை. அதிகமாக சிறுநீர் வெளியேறுதல்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் மருத்துவ உதவியை பெறலாம்.
வாந்தி எடுப்பது ஒரு நாளுக்கு மேலாக அதிகரித்தல். 101 °F க்கு மேல் காய்ச்சல். 2 நாட்களுக்கு மேல் வயிற்றுப்போக்கு. எடை குறைதல்.சிகிச்சைகள் நீரைப் பருகுவதும், திரவ இழப்பை நிறுத்துவதும் தான் மிகவும் பலனளிக்கக்கூடிய சிகிச்சை. வாய்வழி ரீஹைட்ரேஷன்(Rehydration) சிகிச்சை அல்லது நரம்பு ஊடாகச் செலுத்தப்பெறுகிற தேவையான நீர் மற்றும் எலக்ட்ரோலைட்கள்(Electrolytes), ரீஹைட்ரேஷன் மீண்டும் நிரப்பப்படுவதன் மூலம் குணப்படுத்தலாம். மனிதனின் உடல் உழைப்புக்கு ஏற்றவாறு நீர்ப்போக்கு ஏற்படுகிறது, ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும். மேலும், உடலிலிருந்து அதிகமாக நீர்ப்போக்கு ஏற்படும் நேரங்களில், அதனை சரிசெய்வதற்காக நீரினை அருந்த வேண்டும்.நீர்ச்சத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு, பயணத்தின்போது தண்ணீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.நீர்ச்சத்து நிறைந்த காய்கனிகள் வெள்ளரிக்காயில், 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. சுரைக்காய், முள்ளங்கி, செலரி கீரையில் 95 சதவிகிதமும், தக்காளியில் 94 சதவிகிதம், முட்டைக்கோஸில் 93 சதவிகிதம், காலிஃபிளவர், சிவப்பு கோஸ், கீரையில் 92 சதவிகிதமும் நீர்சத்து உள்ளது. தர்பூசணி, ஸ்ட்ராபெரி பழங்களில் 92 சதவிகிதமும், திராட்சையில் 91 சதவிகிதம், அன்னாசி, ஆரஞ்சு பழங்களில் 88 சதவிகிதமும், ஆப்பிளில் 84 சதவிகிதம், வாழையில் 74 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளது. பச்சைக் காய்கறி, பழங்களை ஒரு நாளைக்கு ஐந்து கப் வீதம் எடுத்துக்கொள்ளலாம், இது உடலில் நீர்ச் சத்தை நிலைத்திருக்கச் செய்யும்.
மேலே கூறப்பட்டுள்ள நீர்ச்சத்து நிறைந்த காய்கனிகளை எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ப்போக்கிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply