இறால் பஜ்ஜி

Loading...

இறால் பஜ்ஜி
தேவையான பொருட்கள்

சுத்தம் செய்த இறால் – 500g
மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
கோதுமைமா – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
கடலை மா -150 g
அரிசிமா – 50 g
பஜ்ஜி கலர் ,எண்ணெய் , உப்பு – தேவையான அளவு

இறால் பஜ்ஜி
செய்முறை

* இறாலுடன் மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்து எடுக்கவும் .
* அவித்த இறாலுடன் முன்று தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,எலுமிச்சம்பழச்சாறு என்பன கலந்து எண்ணெயில் நன்கு வதக்கி ஆற வைக்கவும் .
* ஒரு பாத்திரத்தில் 2தேக்கரண்டி மிளகாய்த்தூள் ,கோதுமைமா ,கடலை மா ,அரிசிமா
* பஜ்ஜி கலர் ,உப்பு என்பன சேர்த்து பஜ்ஜி மாப்பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் .
* சட்டியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும் .
* இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

Loading...
Rates : 0
VTST BN